Print – Series 1 (Tamil)

The Legend of Ponnivala print editions are available for purchase online. These colourful, high-quality graphic novels are printed in the US and can be shipped internationally via each book’s web store.

Our print editions are priced at $9.99 US. Individual retailers may discount this price or offer other buying incentives.

In Part One, the goddess Parvati creates nine farmer-brothers to cultivate the land. During a severe drought, the brothers and their wives are forced to seek the aid of the Chola King, who grants them land in Ponnivala. The eldest accidentally kills a herd of sacred cows, and his family and land are cursed by Lord Shiva to suffer seven generations of barrenness.

The old farmer and his wife are granted a magical baby as relief from this terrible curse, but they die when the boy is just five years old. Orphaned and homeless, he finds refuge as a servant in the home of a wealthy farming family. Only when this boy has grown does Lord Vishnu reveal to him that the young sister of his masters is his rightful bride, and that he is the kingdom of Ponnivala’s true heir.

When the kingdom has been reclaimed, the new king and his wise wife undertake a decades-long journey to the Council Chamber of Lord Shiva. They plan to beg his pardon and lift the family curse. This wish is granted, but along the way a new threat to the family and kingdom is revealed. Several seeds of destruction have been planted that will threaten the very existence of the beautiful land of Ponnivala in the next generation.

Use this menu to explore Series 1:

BookCoverPreview T-V1Series 1 Complete Edition

$64.99 US (half off the individual cover price)

This beautifully bound edition contains all thirteen books from Series 1 in a single complete edition. Makes a great addition to any library and for the serious collector! [See the full description here.]

TS1B1Episode 1: In the Beginning (காராளர் தோற்றம்)

$9.99 US

The Goddess Parvati creates nine farmer-brothers. A Chola king gives them land in Ponnivala. Lord Shiva curses the eldest due to the death of some cows.

பார்வதிதேவி பூமியில்  காராளர்களைத் தோற்றுவித்தார்.  சோழமன்னன் அவர்களின்  வாழ்வாதாரத்திற்குறிய விவசாய பூமியான பொன்னிவளநாட்டை  கொடையாக அளித்து  உதவினார்.  விஷ்ணு  அவர்களுக்கு உறுதுணையாக  நின்று அவர்களின் சந்ததிகள்  பெருக அருள் புரிந்தார்.  மூத்தகாராளன் தான் அறியாமல்  பசுக்களுக்கு இழைத்த  அநீதியினால்  ஏழுதலைமுறைக்கும்  குழந்தையில்லாக்  கொடுஞ்சாபத்தைப் பெற்றார்.  இந்த காராளவம்சத்தின்  கதையை உடுக்கைப் பாடகர்கள்  வழிவழியாக பல  தலைமுறைகளுக்கும் பாடிப்  புகழ் பரப்புகின்றனர்.

TS1B2Episode 2: A Young Orphan (அநாதைச் சிறுவன்)

$9.99 US

To lessen the impact of his curse, Lord Shiva hides a baby under some stones. Found, the boy is loved. The couple die and the young boy is orphaned.

காராம்பசுக்களின் இறப்பிற்குக்  காரணமாய் இருந்த காராள குடும்பம், சிவபெருமானிடம் இருந்து குழந்தை பாக்கியமில்லா  கொடுஞ்சாபத்தை பெற்றது. விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் ஒரு  பச்சிளம் குழந்தையை சிருஷ்டித்து ஏழு  கற்களுக்கடியில் மறைத்து வைத்தார். குழந்தை  கண்டெடுக்கப்பட்டு தம்பதியரால் அன்பாக  வளர்க்கப்பட்டது. தம்பதிகள் தமது ஆயுற்காலம் முடிந்து விண்ணுலகம் சென்றனர். இதனால்  குழந்தை அநாதையாக்கப்பட்டான்.

TS1B3Episode 3: A Long Exile (நாடு கடத்தல்)

$9.99 US

The orphan is treated badly by clansmen and runs from place to place. He is mistreated by many but summons his courage. He is a survivor.

அநாதையான குன்னுடையான் பங்காளிகளின் கொடுமை தாங்காமல் ஊர் ஊராக ஓடினான். ஆனால் எங்கே சென்றாலும் கொடுமைகள் அவனை விடாமல் துரத்தின. ஆனாலும் அந்த அநாதைச்சிறுவன் சிறிதும் அசரவில்லை. இறுதியாக தொலை தூரத்தில் தெரிந்த ஒரு சிறுகிராமத்தின் கோவில் கோபுரத்தைக் கண்ட அவனுக்கு  மனதில் சிறு நம்பிக்கை பிறந்தது…

TS1B4Episode 4: A Love Match (உரிமையுள்ள காதலி)

$9.99 US

Finally the orphan boy is adopted by a rich farmer where he works as a shepherd. He grows up, then falls in love with the little sister of his masters.

ஊர் ஊராக ஓடித் திரிந்த அநாதைச் சிறுவன் குன்னுடையான், இறுதியாக நல்லவுள்ளம் கொண்ட இரண்டு பண்ணையார்களிடம் ஆடு மாடுகளை மேய்ப்பவனாக வேலைக்குச் சேர்ந்தான். நாளடைவில் பண்ணையார்களின் தங்கைமேல் காதல் வயப்பட்டான். ஆனால் அவளோ அந்தஸ்தில் இவனுக்கு மிக எட்டா உயரத்தில் இருந்தாள்.

TS1B5Episode 5: A Magical Marriage (அதிசய கல்யாணம்)

$9.99 US

Lord Vishnu tells the shepherd orphan he is eligible to marry the girl he loves. They marry but her family banishes them. They leave for ancestral Ponnivala.

விஷ்ணு, வேலைக்காரனான குன்னுடையானிடம், “நிலக்கிழார்களின் மாமன் மகனான நீதான் அவர்களின் தங்கையை மணமுடிக்க உரிமையுள்ளவன்,” என்று கூறி அவர்களுக்கு மணமுடித்து வைத்தார். ஆனால் நிலக்கிழார்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை. புதுமணத்தம்பதிகளை ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கிறார்கள். தம்பதிகள் தங்கள் சொந்த நாடான பொன்னிவளநாட்டை நோக்கிச் செல்கின்றனர்.

TS1B6Episode 6: Roasted Seeds (வறுத்த விதைகள்)

$9.99 US

The young couple reclaim one field from their rival clansmen who try to undercut them by giving them roasted seeds to sow. Lord Vishnu helps them out.

குன்னுடையான்  பங்காளிகளிடமிருந்து  தனக்குச் சொந்தமான  நிலத்தில் சிறுபகுதியைப்  பெற்றார். ஆனால்  பொறாமை கொண்ட  பங்காளிகள் வறுத்த  விதைகளை விதைக்கக்  கொடுத்தனர். விஷ்ணுவின்  உதவியால் வறுத்த  விதைகளும் முளைக்கத்  தொடங்கின, அவர்களின்  எதிர்கால வாழ்க்கையிலும்  நம்பிக்கை துளிர்த்தது.

TS1B7Episode 7: A Thousand Beggars (ஆயிரம் யாசகர்கள்)

$9.99 US

The roasted seeds grow, but there are more tricks. When jewels replace the maize grains, the Queen gives this new wealth to beggars. Lord Vishnu replenishes it.

இளம்தம்பதிகளின் கடுமையான உழைப்பினால் பயிர்கள் நன்கு வளரத் தொடங்கின. மேலும் விளைந்த சோளக்கதிர்களில் ஒரு அதிசயம் காத்திருந்தது…

TS1B8Episode 8: A Cruel Curse (கொடிய சாபம்)

$9.99 US

The King and Queen rebuild their palace. At the celebration the Chola monarch gives them honours. But the Queen is barren, and worried about the future.

குன்னுடையான்  தனக்குக் கிடைத்த  பெருஞ்செல்வத்தைக் கொண்டு, தன் தந்தையின் அரண்மனை இருந்த  இடத்தில், புதிய அரண்மனையைக் கட்டினான்.  அரண்மனைத் திறப்பு விழாவிற்கு, மூன்று தேசத்து அரசர்களையும், சுத்துப்பட்டு  கிராமத்துப் பிரதிநிதிகளையும், மக்களையும் அழைத்து சிறப்பாகக் கொண்டாடினான்.  அப்போது, மூவேந்தரும் இணைந்து  பொன்னிவள நாட்டை ஆளும் உரிமையை அவனுக்குக் கொடுத்தனர். நாடே மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், தாமரை மட்டும்  வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள்.

TS1B9Episode 9: The Counter Curse (உத்தமியின் சாபம்)

$9.99 US

The Queen wants to visit her brothers. Against her husband’s advice she goes, and is not well received. In revenge she curses their family.

வருடங்கள் பல கடந்தும் குன்னுடையானுக்கும், தாமரைக்கும் குழந்தையே பிறக்கவில்லை இதனால் தாமரை, ஆறுதலுக்காக தன் அண்ணன்களின் குழந்தைகளைப் பார்த்து வர ஆசைப்பட்டாள். ஆனால் தங்களை அவமானப்படுத்திய அவர்களிடம் தாமரை செல்வதை குன்னுடையான் விரும்பவில்லை. ஆனாலும் அவள் தன் முடிவில் உறுதியாக இருந்தாள்.

TS1B10Episode 10: The Pillar of Destruction (விரக்தியின் பலன்)

$9.99 US

The Queen visits the Goddess Kali where her brothers beg forgiveness. She removes the curse. Tamarai is still greatly troubled. Lord Vishnu offers help.

வாளவந்தியில் தாமரை தன் அண்ணன்களால் அடிக்கப்பட்டு, அவமானப் படுத்தப்படுகிறாள். இதனால், கோபங்கொண்டு அவர்கள் மேல் சாபமிட்டு பின் காளிகோவிலுக்குச் செல்கிறாள். அங்கே வந்த அண்ணன்கள் சாபத்தை நீக்குமாறு மன்னிப்புக் கேட்கிறார்கள். பின்பு, பொன்னிவளநாட்டுக்குத் திரும்பிய அவளிடம், தன் பேச்சைக் கேட்காமல் அண்ணன்களிடம் சென்று வந்ததிற்காக குன்னுடையான் கடும்கோபம் கொண்டான். இதனால் மனமுடைந்துபோன அவளுக்கு உதவ விஷ்ணு வந்தார்.

TS1B11Episode 11: A Pilgrim’s Journey (சாப நிவர்த்தி)

$9.99 US

The couple narrowly escape a death plot by crafty artisans and clansmen. The Queen is still barren. Lord Vishnu promises her children in return for many good deeds.

குன்னுடையானும், தாமரையும் குழந்தை வரம் வேண்டி மகாவிஷ்ணு கூறிய புண்ணிய காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கினர். அதன் ஒரு அங்கமாக, தேர் இழுத்தல் இடம்பெற்றது. அப்பொழுது அவர்களின் தலையை தேர்ச்சக்கரத்தில் கொடுத்து உயிரைப் பறிக்க பங்காளிகள் சதி செய்தனர். ஆனால், விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றபட்டு, தங்களது பரிகாரங்களை செய்து முடிக்க ஆயத்தமானார்கள்.

TS1B12Episode 12: The Gates of Heaven (சொர்க்க வாசல்)

$9.99 US

The King and Queen undertake a long pilgrimage and meet with many adventures. The King has to stop. The Queen reaches heaven’s gate alone.

குன்னுடையானும், தாமரையும், குழந்தை வரம் வேண்டி இருபத்தியொரு வருட தவத்தைப் புரிய பல இன்னல்களையும் தாண்டி, காசியை நோக்கி நீண்ட பயணம் மேற்கொண்டனர். மேலும், பயணத்தின் போது உடல் நலிந்து, நடக்க முடியாமல் போன கணவனை, தாமரை தன் முதுகில் சுமந்து சென்றாள். விஷ்ணுவின் அருளாசியினால், இறுதியாகத் தவம் செய்ய வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

TS1B13Episode 13: The Book of Fate (விதியின் கணக்கு)

$9.99 US

The Queen undergoes a long penance. Lord Shiva has her die seven times, then places three magical children in her womb. The couple returns home.

குழந்தை வரம் வேண்டி கைலாய மலைக்கு பல இன்னல்களையும், தடைகளையும் தாண்டி வந்த தாமரை, தவசு கம்பத்தின் மேல் ஊசி முனைகளில் நின்று, தன் இருபத்தியொரு வருடத் தவத்தை தொடங்கினாள். சிவனால் பல வழிகளிலும் கடுஞ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இறுதியில், அவளது கடுந்தவத்தைக் கண்டு மனமிறங்கிய சிவன் அவளுக்குக் குழந்தை வரத்தை அருளினார்.

 

© 2025 Ponnivala Market | Design Theme by: D5 Creation | Powered by: WordPress